Tuesday, May 19, 2009

எப்பொருள் யார் யார் வாய் கேற்பினும்.....

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதாக பொய் கூறி
உலகை ஏமாற்றும் இலங்கை ... புட்டு வைத்துள்ளது மக்கள் தொலைக்காட்சியும்....

பிரபாவின் இறந்த உடல்: பல சந்தேகங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2009, 11:16.45 AM GMT +05:30 ]
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அவரைப்போன்று ஒரு உருவ அமைப்புடைய இறந்த உடலை இலங்கை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.

இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004 கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி? அந்த படத்தில் 35 தொடக்கம் 40 வயதான தோற்றத்தையே அளிக்கிறது.

முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லை. 2004ம் ஆண்டு புகைப்படத்தில் அவருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்திருக்கின்றன.

கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மற்றும் அந்த சூழநிலையில் இருந்து கனகச்சிதமாக முகச்சவரம் செய்தி இருப்பாரா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அம்புலன்ஸ் வண்டியில் தப்பி செல்லும் போது சூட்டுக்கு பலியாகியாத அறிவித்த இராணுவம் இன்று மதியம் 12 மணியளவில் முல்லைத்தீவு நந்திக்கடலுக்குள் இருந்து உடலை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.


2004-கார்த்திகை 26 எடுக்கப்பட்டது


இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம்

No comments: