சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை நடந்த சிறிலங்கா இராணுவத்தின் மக்கள்மீதான தாக்குதலில் 2000க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வன்னி மருத்துவ வட்டாரங்களில் இருந்து வந்த செய்தியில் தெரியவருகிறது.
பலதரப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து மக்கள் வலயத்துக்குள் தொடர்ந்து நடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலால் சடலங்கள் எங்கும் பரவிக்கிடப்பதாகவும் இதில் 814 பேர் வரையில் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டதாகவும், வார்த்தையில் சொல்லிவிடமுடியாத அவலத்தை சாமாளிக்கமுடியாமல் தாம் உள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கும் தற்காலிக வைத்தியசாலையின் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்துலக சமுதாயத்தின் கவனிப்பைக்குறைப்பதற்காக சிறிலங்கா இராணுவமானது தனது கூட்டுக்கொலைகளை விடுமுறை நாட்களில் அரங்கேற்றுவது வழமை.