'மோதல் தவிர்ப்பு பிரதேசம்" என ஒன்று தற்போது இல்லை. கனரக ஆயுதங்களின் மோதல் தளமாகவே அது காணப்படுகிறது.- ஜோன் ஹோம்ஸ் |
[ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:47.54 AM GMT +05:30 ] |
மோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாரக்கணக்கான பொது மக்கள் உயரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர் அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடைநிறுத்ததினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. |
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொது மக்கள் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் எறிகனைகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்களினால் மாத்திரம் இன்றி உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் இல்லாததன் காரணமாகவும் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியோர்க் நகரில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். தற்போது பாதுகாப்பு வலயம் அல்லது மோதல் தவிர்ப்பு பிரதேசம் என்று ஒன்று அங்;கு இல்லை அது கனரக ஆயுதங்களின் தாக்குதல் இடம்பெறும் தளமாகவே காணப்படுவதாக ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் வவுனியா முகாம்களுக்கு சென்று நேரடியா பார்வையி;ட்டதன் பின்னர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தம் ஒன்றினை முன்வைத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டு எழுந்து விடுவர் என்ற அச்சத்தில் அந்த அறிவிப்பை பற்றி சிந்திக்காமலே இருக்கிறது. அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் குறித்த இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமையிட்டு வருவத்தமடைவதாகவும் எனினும் மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் பாதுகாப்பின் பொருட்டும் அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை விநியோகிக்கும் பொருட்டும் தொடர்ந்தும் யுத்த நிறுத்தம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தும் என ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை மோதல் பிரதேசத்தில் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தை போல கனரக ஆயுதங்களை பாவிக்க கூடாது என்பது மிகவும் முக்கியமாக விடயம் என ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த உறுதி மொழி தொடர்ந்தும் கடைபிடிக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துரதிஷ்ட்ட வசமாக இருத்தரப்பினரும் இராணுவ நடவடிக்கையினை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே இவ்வாறானதொரு நெருக்கடியான நிலை தோன்றியுள்ளது. என ஜோன் ஹோம்ஸ் இதன் போது சுட்டிக்காட்டினார். |
Thursday, April 30, 2009
'மோதல் தவிர்ப்பு பிரதேசம்" என ஒன்று தற்போது இல்லை. கனரக ஆயுதங்களின் மோதல் தளமாகவே அது காணப்படுகிறது.- ஜோன் ஹோம்ஸ் [ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment