Thursday, April 30, 2009

'மோதல் தவிர்ப்பு பிரதேசம்" என ஒன்று தற்போது இல்லை. கனரக ஆயுதங்களின் மோதல் தளமாகவே அது காணப்படுகிறது.- ஜோன் ஹோம்ஸ் [ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:

'மோதல் தவிர்ப்பு பிரதேசம்" என ஒன்று தற்போது இல்லை. கனரக ஆயுதங்களின் மோதல் தளமாகவே அது காணப்படுகிறது.- ஜோன் ஹோம்ஸ்
[ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:47.54 AM GMT +05:30 ]
மோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாரக்கணக்கான பொது மக்கள் உயரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர் அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடைநிறுத்ததினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொது மக்கள் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் எறிகனைகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்களினால் மாத்திரம் இன்றி உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் இல்லாததன் காரணமாகவும் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியோர்க் நகரில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதுகாப்பு வலயம் அல்லது மோதல் தவிர்ப்பு பிரதேசம் என்று ஒன்று அங்;கு இல்லை அது கனரக ஆயுதங்களின் தாக்குதல் இடம்பெறும் தளமாகவே காணப்படுவதாக ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் வவுனியா முகாம்களுக்கு சென்று நேரடியா பார்வையி;ட்டதன் பின்னர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தம் ஒன்றினை முன்வைத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டு எழுந்து விடுவர் என்ற அச்சத்தில் அந்த அறிவிப்பை பற்றி சிந்திக்காமலே இருக்கிறது.

அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் குறித்த இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமையிட்டு வருவத்தமடைவதாகவும் எனினும் மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் பாதுகாப்பின் பொருட்டும் அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை விநியோகிக்கும் பொருட்டும் தொடர்ந்தும் யுத்த நிறுத்தம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தும் என ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மோதல் பிரதேசத்தில் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தை போல கனரக ஆயுதங்களை பாவிக்க கூடாது என்பது மிகவும் முக்கியமாக விடயம் என ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த உறுதி மொழி தொடர்ந்தும் கடைபிடிக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஷ்ட்ட வசமாக இருத்தரப்பினரும் இராணுவ நடவடிக்கையினை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே இவ்வாறானதொரு நெருக்கடியான நிலை தோன்றியுள்ளது. என ஜோன் ஹோம்ஸ் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Tuesday, April 28, 2009

தமிழர்களின் சாவில் சதிராடும் சர்வதேசம் இனி நடக்கப்போவது என்ன?

27/04/2009, 14:32 [ நிலாமகன்]
தமிழர்களின் சாவில் சதிராடும் சர்வதேசம் இனி நடக்கப்போவது என்ன?

உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வன்னிக் களம் இன்னும் தமிழர்களின் குருதிக் குழம்பில் கொதித்துக் கிடக்கின்றது.

எவருடைய ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் ஏன் அச்சுறுத்தல்களையும் கூட செவிமடுக்க இலங்கையின் அதிகார பீடம் விரும்பவில்லை.

மிகக் கடினமான தமது யுத்த முன்னெடுப்பை உலக அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ராஜபக்ச சகோதரார்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

மூன்று தசாப்பத கால விடுதலைப் போர் அதன் இறுதி தறுவாயில் என்று உலகம் பேசிக்கொள்கின்றது.

இன்னும் வன்னியில் மிச்சமிருக்கும் தமிழர்களையும் மீட்டுவிட்டால் புலிகளின் கதை முடிந்து விடும் என்பது இலங்கை இராணுவ தளபதியின் எதிர்பார்ப்பு.இப்போது இன்னும் 15000 பேர் மட்டுமே பாதூப்பு வலயத்தில் எஞ்சியுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை தொடர்ந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தவர்கள் தொடர்பில் அரச பரப்புரை தரப்புகள் முரண்பாடான தகவல்களையே தொடர்ந்து வழங்கி வருகின்றன.

முன்னர் 70000 ற்கும் குறைவான மக்களே பாதுகாப்பு வலயத்தில் வாழ்வதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பல தடவைகள் கூறியிருந்தார் எனினும் பாதுகாப்பு வலயம் மீதாக தாக்குதலை அடுத்து இதுவரை ஒரு இலட்சம் பேர் வரை மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.

ஆனால் இந்த முரண்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு இலங்கையின் ஊடகங்கள் எவற்றாலும் முடிவதில்லை ,அவற்றின் எதிர்கால இருப்பு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி அவை இலங்கையின் ஊடக தர்மத்தை கடைப்பிடிக்கின்றன.

பாதுகாப்பு வலயம் புதுமாத்தளனுக்கு வடக்காகவும் தெற்காவும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.வடக்கு பகுதி முழுமையாக படையினரின் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது தென் பகுதியில் இன்றும் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்கள் தங்கியுள்ளனர்.

இப்போதும் அரசாங்கம் சில ஆயிரம் பேர் வரையே மீட்கப்படாத பாதுகாப்பு வலயத்தில் இருப்பதாக கூறுகின்றது ஆனால் இது உண்மையல்ல என்பது சர்வதேசத்திற்கு தெரியும் ஆனாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தான் தற்போது தோன்றியுள்ளது.

புலிகள் மக்களை மனிதக் கேடயங்காளக வைத்துள்ளார்கள் என்ற பலமான கோசங்கள் இப்போது எழுந்துள்ளன,ஆனால் உண்மையான கள நிலவரம் அதுவல்ல என்கின்றனர் அங்கிருந்து வருகை தந்தவர்கள் அது உண்மையாக இருப்பதற்கு சாத்தியங்கள் பல உள்ளன.

அரசாங்கம் கூறுவது போல் புலிகள் முற்றாக பலமிழந்து விட்டதான கூற்றை ஏற்க முடியாத நிலையே காணப்படுவதாக படைத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

இங்கே நாங்கள் இங்கே கூறும் போது செத்துப் போன புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுக்க முனைவதாகவும் புலம் பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்த முயல்வதாகவும் கருத்துக் கூறிகள் பதிவிடுவார்கள்,அவர்களுக்கு அவர்களுக்கு புரியும் படி பதில் கூறுவதற்கு என்னை விடவும் அவர்களுக்கு பிடித்த தலைவர்களின் ஒருவரான கருணா பொருத்தமானவர் என்றே நான் கருதுகின்றேன்

அண்மையில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா தெரிவித்துள்ள கருத்து மிகவும் ஆழமாக கவனிக்கப்பட வேண்டியது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் உள்ள பகுதியிலேயே மறைந்திருப்பார் என்றும் மன்னார் கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகனில் அவர் தங்கியிருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது இராணுவ தளபதியின் விடுதலைப் புலிகளின் தலைவர் பாதுகாப்பு வலயத்தில் வாழ்வதான கூற்றுக்கு சவாலானது.

அப்படியானால் இராணுவம் மீட்ட பகுதிகளான அறிவிக்கப்பட்ட மன்னார் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்றவை மீண்டும் புலிகள் வசமாகிவிட்டதா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது அல்லது புலிகள் தமது முக்கிய படைகளையும் இராணுவ தளபாடங்களையும் வைத்துள்ள பகுதிகள் இன்னும் இராணுவத்தால் மீட்கப்பட்டிருக்கவில்லை என்பது உண்மையாகிவிடுகின்றது.

இவை மன்னார் கிளிநொச்சி மணலாறு என பரந்து விரிந்த நேரடி நிலத் தொடர்பற்ற பிரதேசங்களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை உறுதி செய்ய முடியாத போதிலும் புலிகளின் அடி நுனி தெரிந்த கருணாவின் கூற்றின் மூலம் சில விடயங்களை ஊகிக்க முடியிகின்றது.

அவை புலிகளிடம் இன்னும் அழிக்கப்படாத வளங்களும் வலுவும் இருக்கின்றது அவை பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் காண்படுகின்றன.இவற்றை புலிகள் பயன்படுத்தாமல் பாதுகாப்பதற்கு பின்னணியில் மிகப்பெரிய சூட்சுமம் ஒன்று இருக்கின்து போன்றனவாகும்

இராஜதந்திர நல்களை கருதி புலிகள் கடைப்பிடிக்கும் ஊடக மௌனத்தின் சாதகங்களை அரசாங்கம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இணையப்பரப்பில் இலங்கை வரைபடத்தின் அனைத்து பகுதிகளிலும் சிங்க கொடிகளை பறக்க விட்டு சிங்கள தேசத்தை திருப்திப்படுத்துகின்றதாக என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது

புலிகள் ஆனந்தபுரத்தில் தான் மிக மோசமான இழப்பை சந்தித்துள்ளனர் அது தளபதிகள் மற்றும் போராளிகள் என பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய இழப்பு என்பது மறுப்பதற்கல்ல ஆனால் இதுவரை நடைபெற்ற போரில் ஏற்பட்ட இழப்புகள் என்பது புலிகளின் மொத்த படைப்பலத்தைவிட குறைவானது என்பதே தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வு சஞ்சிகையின் கருத்தாக இருக்கின்றனது.

முறியடிப்பு சமர்கள் மற்றும் வழிமறிப்பு சமர்கள் ஊடறுப்பு தாக்குதல்கள் என மரபு சாரா பேர் முறைகளை தான் புலிகள் இதுவரை வன்னி கள முனையில் பயன்படுத்தி வருகின்றனர்.

இராணுவம் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக பட்டியலிடும் ஆயுதத் தொகுதிகள் குறித்தும் சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

புலிகளின் பலமான தாக்குதல் அணிகள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் எவையும் இன்னும் கள முனைக்கு நகர்த்ப்படாதமை குறித்து அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பே சந்தேகம் கொண்டுள்ளது.

மூன்று தசாப்தகால் வளர்ச்சியில் புலிகளின் பலமான ஆயத வலையமைப்பின் மூலம் வன்னிக்கு தருவிக்கபட்ட ஆயுதங்கள் எவற்றையும் படைத்தரப்பால் இதுவரை கைப்பற்ற முடியவில்லை மாறாக புலிகளிடம் இருந்து மீட்டதாக அறிவித்தவை அனைத்தும் இராணுவத்திடம் இருந்து புலிகள் கைப்பற்றியவை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் காட்டம் ஆயதங்கள் அனைத்தும் புலிகளிடம் இருந்து மீட்கப்படடதா அல்லது அரசாங்கம் தமது ஆயுதங்களையே காட்சிப்டுத்தி தென்பகுதி மக்களை திருப்பதி படுத்த முனைகின்றதா என்ற சந்தேகம் எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது.

புலிகளின் பலம் குறைவடைந்து விட்டதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தாலும் அவர்களின் பலத்தை முற்றாக தமது படை நடவடிக்கைகள் மூலம் அழிக்க முடியாது என்றும் வன்னி களமுனைகளில் உள்ள கட்டளை தளபதி வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவருக்கு நெரடியாக தெரிவித்துள்ளார்

தமக்கும் தமது படை அதிகாரிகளுக்கும் புலிகளின் இந்த பின்வாங்கல்,மற்றும் பின்னடைவுகள் குறித்து அச்சம் கலந்த சந்தேகம் நிலவுவதாக அவர் கூறியுள்ளார் புலிகளின் இந்த நகர்வுகள் நிச்சயம் பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தாங்கள் கருதுவதாகவும் ஆனாலும் யுத்தத்தின் வெற்றி என்ற வகையில் தமது கடமையை தாங்கள் சரிவர செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசாங்கம் குறிப்பிடுவது போல் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை இந்தியாவிற்கு கூட இல்லை.

தமது தலைவரை பழிதீர்க்கும் முகமாக பிரபாகரனை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்கி ஆறுதல் தேடும் நோக்கிலேயே இந்திய மத்திய அரசு தனது இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

ஆசிய பிராந்திய வல்லரச நிலையை எய்தும் இந்தியாவின் நலன்களுக்கு இந்த குறுகிய அரசியல் நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இதேவேளை விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இலங்கையில் முற்றாக துடைத்தழிக்கப்படுவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது என்பதை மேற்குலகின் போக்குகளை புரிந்து கொண்டவர்களால் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.

விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படால் இலங்கை சீனாவினதும் ரஸ்யாவினதும் கைப்பொம்மையாகிவிடும் இது தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க விருப்பிற்கு முரணாகிவிடும்.

அதனை அண்மைக்கால மேற்குல போக்குகள் மூலம் நாங்கள் தெளிவாக உணர முடியும்.

இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தம் ஒன்றை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தல் மிக முக்கியமானது.

இதன் தொடர்ச்சியாக இலங்கையின் சரிந்து போயுள்ள பொருளாதாரத்தை தாங்கும் வல்லமை கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகைக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரோபேர்ட் பிளேக் இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார் இதனை அமெரிக்க தூதுவரால் நிராகரிக்க முடியாது என்று அவர் சாவல் விடுத்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் நகர்வு உறுதிப்படுத்தப்படுகின்றது.

இதன் மூலம் அமெரி;க்கா புலிகளுக்கு ஆதரவளித்து யுத்தத்தின் போக்கை மாற்றி விடும் என்றோ அல்லது தமிழீழ தனியரசுக்கு தார்மீக ஆதரவை வழங்கி விடும் என்றோ எவரும் தவறாக அனுமானிக்க முடியாது.

இது முற்றிலும் அமெரிக்க நலன் சார்ந்த விடயமாக மட்டுமே நோக்கப்பட வேண்டம் ஆனால் அதில் தமிழர்களின் நலன்களின் ஒரு பகுதி உள்ளடங்கி கிடக்கின்றது.

புலிகள் இராணுவ ரீதியாக பலத்த பின்னடைவுகளை நிலப்பரப்புகளையும் முக்கிய சில தளபதிகளையும் இழந்தமை மூலம் சந்தித்துள்ள போதிலும் அவர்களின் தமிழீழ தனியரசுக்கான பொராட்டம் தெளிவான திசையில் வெற்றிகரமான பாதையில் போய் கொண்டிருக்கின்றது என்பதை அனைத்து தரப்பினரும் தெளிவாக உணர வேண்டும்.

இதுவரை இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தமிழர் வாழும் தேசமெங்கும் எதிரொலிக்கின்றது.

ஆறு கோடி தமிழர்கள் வாழும் இவ்வுலகில் அவர்களுக்கான ஒரு நாடு இல்லை என்கின்ற ஏக்கம் ஒவ்வொரு தமிழனின் அடிமனதிலும் ஆழ பதியவைக்கப்பட்டுள்ளது.

இதுவைர தார்மீக ஆதரவு வழங்கி வந்த தமிழகம் இப்போது முழு அளவில் தமிழீழ ஆதரவுப் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது.

சுயலாப அரசியில் வியாபாரிகளின் கோமளித்தனங்களை அகற்றி விட்டு பார்த்தால் தமிழகத்தில் தோன்றியுள்ள பேரெழுச்சி இந்தியாவையே அசைக்கும் என்பது உறுதி.

அது தவிரவும் புலம் பெயர் நாடுகளில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்கள் உண்ணா நோன்புகள் என்பன தமிழர்களின் அவலங்கள் குறித்து உலகின் கவனத்தை திருப்பியுள்ளன.

இவற்றின் விளைவால் எதிர்வரும் 29ம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் குறித்து முதல் தடவையாக ஆராயப்படவுள்ளது.

இது மிக முக்கியமான ஒரு நிகழ்வு இதனை தடுப்பதற்கு இலங்கை அரசும் அதன் சார்பு நாடுகளும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளன.

உத்தியோக பூர்வமற்ற முறையில் இலங்கை விவாகரம் குறித்து ஐநாவின் பாதுகாப்பு சபை ஆராய்ந்துள்ளது எனினும் அதனை பாதுகாப்பு சபையின் உத்தியோக பூர்வ விவாதத்திற்கு எடுப்பதற்கு வழமை போலவே சீனா ரஸ்யா ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.

இலங்கைக்கு விஜம் செய்த ஐநாவின் செயலளர் நாயகத்தின் பிரதிநிதி விஜய் நம்பியார் தனது விஜயம் குறித்து பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளுக்கும் விளக்கமளித்துள்ளார்

முன்னர் அது தனது தனிப்பிட்ட விடயம் என்று மறுப்பு தெரிவித்த விஜய் நம்பியார் தனது முடிவை மாற்றி பாதுகாப்பு சபை நாடுகளுக்கு விளக்கமளித்துள்மை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய மான மாற்றம்

இந்த விவாதத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது, ஐநாவின் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு வலயங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நாங்கள் கேட்டு சலித்த விடயங்கள் தான் முதன்மைப் படுத்தப்படும்.

பொதுவாக ஐநாவின் பாதுகாப்பு சபையில் விவாதம் நடத்தப்படுவது இரு நாடுகளுக்குகிடையிலான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தாகவே அமையும் எனவே இலங்கை விவாகரம் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லப்படுவது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக அமையும்.

ஐநாவின் கண்காணிப்பை இலங்கையில் ஏற்படுத்துவது பாராதூரமான விளைவுகளை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது இது சீனா ரஸ்யா போன்ற நாடுகளின் இலங்கையை தளமாக கொண்ட எதிர் கால செயல்பாடுகளுக்கும் பாதகாமாக அமையும்.

இதன் காரணமாகவே இலங்கையின் பிரச்சினையை சர்வதேச தலையீடுகள் இன்றி இராணுவ ரீதியில் முடித்து வைக்க சீனாவும் ரஸ்யாவும் முனைகின்றன.

இது சாத்தியமாகும் பட்சத்தில் அமெரிக்கா தனது தெற்காசிய மீதான பிடிமானத்தை முற்றாக இழக்க நேரிடும் இதனை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதால் சிங்கள தேசியவாதிகள் கூறுவது போல் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய அமெரிக்கா அனுமதிக்காது என்பது உண்மை அது நிச்சயமாக தமிழர்கள் மீதோ விடுதலைப்புலிகள் மீதோ அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு என்று எவரும் கருதிவிடலாகாது.

இது நிச்சயம் தனது வல்லரசுக்கான நிலையை தக்கவைப்பதற்கான அமெரிக்காவின் உபாயம் அதனை புலிகள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை உண்மை.

ஐநாவின் கண்காணிப்பில் மக்கள் வெளியேற்றப்படுவதாக இருந்தால் ஐநாவின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் வன்னிக்குள் அனுமதிக்க வேண்டும் அவ்வாறு இலங்கை அரசாங்கம் அனுமதித்தால் அது இதுவைர புரிந்த போர்க் குற்றங்கள் அம்பலத்திற்கு வந்து விடும்.

அனுமதிக்க மறுத்தால் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும் ஆக மொத்தம் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மனிதக் கேடய விவகாரம் அதற்கே பிரச்சினையாக மாறப் போகின்றது.

இதனை தடுப்பதற்கும் இலங்கையில் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்தவும் சீனாவும் ரஸ்யாவும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.

பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை கொண்டு வரமால் தடுக்க இவை எடுக்கும் முயற்சிகள் மேற்குலகத்திற்கு மேலும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போதைய வெளிப்படையான கள நிலமைகள் விடுதலைப் புலிகளுக்கு பாதகமாகவே இருக்கும் நிலையில் இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபையில் எடுக்கப்படுவதை ஏன் இந்த நாடுகள் தடுக்கின்றன பாதுகாப்பு சபையில் இலங்கை விவாகரம் ஆராயப்படால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்ற கேள்விக்கான விடை இனி வரும் நாட்களில் கிடைத்து விடும்.

விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக்கி தங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் அது இராணுவ நலன் சாராத இராஜதந்திர நலன் சார்ந்த விடயம் என்பது இப்போது தான் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றது.

உண்மையில் வன்னியின் பூகோளவியல் அறிவு படைத்தவர்களுக்கும் புலிகளின் ஆளுமைகள் பற்றி அறிந்தவர்களுக்கும் புலிகளின் நகர்வுகள் எவ்வாறானவை என்பது புரிந்திருக்கும்.

மகிந்த ராஜபக்ச என்ற தீவிர சிங்களவாத போர்க்குணம் படைத்த ஒருவரை ஜனாதிபதியாக்கியது முதல் அவர்களை வலிந்து போருக்கு அழைத்து தமது கட்டுப்பாட்டு பகுதிகள் அனைத்தையும் இழந்தது விடுதலைப் புலிகளின் மூடத்தனம் என்று கருதுகின்றவர்களுக்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று நம்பலாம்

இப்படியெல்லாம் நடைபெறும் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் கருதியிருக்கமாட்டார் இலங்கை இராணுவத்தை தோற்கடிக்கும் எண்ணத்தில் தான் அவர் வலிந்த போரை ஆரம்பித்தார் என்று கூறிகின்றவர்கள் விடுதலைப் புலிகளின் போக்கை சரிவர கவனிக்க தவறியவர்களாகவே கொள்ளப்பட வேண்டியவர்கள்.

சிறு குழுவாக தொடங்கிய விடுதலைப் புலிகளை முப்படைகளும் கொண்ட மாபெரும் போராட்ட இயக்கமாக வளர்த்த பிரபாகரன் சிறுபிள்ளை தனமாக சிந்தித்து தனது இத்தனை வருடகால போரட்டத்தை மகிந்தவிடம் தாரை வார்ப்பார் என்று எவரும் நம்பினால் ஐயோ பாவம் என்பதை தவிர வேறென்ன செய்ய.

இந்த போர் விடுதலைப் புலிகளுக்கு இராணுவ ரீதியாக பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் அவர்களின் கொள்கைக்கு மிகப்பெரும் வலுவை சேர்த்துக் கொடுத்துள்ளது அந்த பலம் என்பது அவர்கள் இதுவரை பெற்ற இராணுவ வெற்றிகளை விடவும் உயர்வானது என்பது தான் உண்மை.

இப்போது வன்னியில் ஏறத்தாள இரண்டு இலட்சம் பேர் வரையான மக்கள் இருக்கின்றார்கள் ஆனால் அரசாங்கம் அவர்களின் எண்ணிக்கை 15000 என்றே கூறி வருகின்றது அப்படியானால் அங்கு எதிர்காலத்தில் நடத்தப்படும் தாக்குதலில் 15000 பேர் மட்டமே மீட்கப்படுவார்கள் ஏனையவர்கள் என்ன ஆவர்கள் என்பதற்கு பதில் அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவால் தெரிவிக்கப்பட்டு விட்டது.

சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மத்தியில் பாதுகாப்பு வலயம் மீதான தமது தாக்குதல் நடவடிக்கை குறித்து கோட்டபாய விளக்கமளித்துக் கொண்டிருந்த போது பெருமளவு மக்கள் வாழும் ஒரு சிறிய பகுதி மீது தாக்குதல் நடத்தி அந்த மக்களை மீட்பதற்கு எவ்வாறு நீங்கள் துணிந்தீர்கள் என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த கோட்பாய ரஸ்யாவில் பேஸ்லான் பாடசாலையில் தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மக்கள் மீட்ட நடவடிக்கையினை தான் முன்னுதாரணமாக கொண்டதாக கூறினார்.

2004ம் ஆண்டு ரஸ்ய படைகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் பணயக்கைதிகளில் அரைவாசிப் பேர் உயிரிழந்தனர் இவர்களில் பெருளமவானவர்கள் சிறுவர்கள்.சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்திய அந்த நடவடிக்கைக்கு ரஸ்யா அரசாங்கம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அவ்வாறான நடவடிக்கையினையே தான் மேற்கொள்வதாக கூறியதன் மூலம் பாதுகாப்பு வலய பகுதி மக்களில் பலர் கொல்லப்படுவார்கள் என்பதை கோட்டபாய ராஜபக்ச சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆந்த சந்திப்பில் கலந்து கொண்ட எந்த ஒரு நாட்டினதும் இராஜதந்திரியாலும் அவரது இந்த கருத்தினையும் நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்த முடியாமல் போனது வருத்தத்திற்குரியது.

எனினும் ரஸ்யா மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்திற்கு அறிவிப்பதற்கும் அங்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிக்கை இடவும் ஊடகவியலாளர்களும் மனிதாபிமான பணியாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

ஆனால் வன்னியில் நிலைமைய வேறுவிதமானது அங்கு எத்தனை பேர் வாழ்கின்றார்கள் எத்தனை பேர் சாகின்றார்கள் என்பதை கூறுவதற்கு எவரமே இல்லை.

போர் பகுதிகளில் கடமையாற்ற வேண்டிய மனிதாபிமான அமைப்பான சர்வதே செஞ்சிலுவைச் சங்கமே தனது கோட்பாடுகளை இலங்கை அரசின் காலடியில் போட்டு விட்ட சரணாகதி அடைந்து கிடக்கின்றது.

ஆக மொதத்தில் மிகப்பெரிய மனிதப் பேரவலம் ஏற்படுதவற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்,சர்வதேசத்தை திசை திருப்ப சில சில்மிசங்களை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது அதில் முக்கியமாக ஐநாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையின் தூதுக்குழு.

அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா ரிசாத் பதியுதீன் என வன்னி மக்களுடன் தொடர்பான சிறுபான்மையின அரச பிரதிநிதிகள் இவர்கள் ஐநாவின் செயலாளருக்கு தெரியப்படுத்தும் நிலவரத்தை அவர் அப்படியே ஏற்றுக் கொள்ளவாரா என்பதற்கு அப்பால் எதோ ஒரு சிறு தாக்கத்தை அவர்களால் ஏற்படுத்த முடியும் என்பது உண்மை தான்

ஆக அரசாங்கம் தனது இறுதி நடவடிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது திகதி குறிப்பது மட்டும் தான் மிச்சம் என்கின்றது படைத்தரப்பு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் புலிகளின் இராஜதந்திரிமா அரசின் இராஜதந்திரிமா வெற்றி பெறப் போகின்றது என்பதை.

எதுவாக இருந்தாலும் அது அப்பாவி தமிழர்களின் உயிரற்ற உடலங்களின் மீதே நடைபெறும் என்பது மட்டும் மறுக்க முடியாத நிஜம்.

இதனை தடுப்பதற்கும் தமிழர்களின் விடுதலை மூச்சை தக்கவைப்பதற்குமான பலம் இப்போது பலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களிலேயே தங்கியுள்ளது.

வலுப்பெறும் தமிழர் போராட்டம் மேற்கலக கதவுகை தட்டடி திறக்கும் அவை தமத போக்கை மாற்றும் நிலை ஏற்படும் அப்பபோது உலக தமிழர்களின் போராட்டங்களுக்கான தீர்வு தமிழீழ தனியரசாக மலரும் என்பது உறுதி.
நன்றி பதிவு .

Friday, April 24, 2009

இறுதி அழிவுத்தாக்குதளுக்கு இராணுவம்...

23/04/2009, 15:40 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்]
இன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்?

சிறீலங்காப் படையினர் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. படை நடவடிக்கையினால் வன்னியில் பெருந் தொகையில் மக்கள் கொல்லப்படும் அச்சம் மேலோங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இப் படை நடவடிக்கைகளுக்கான பின்தள நகர்வுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் முள்ளிவாய்கால் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறா மற்றும் கூவர் பீரங்கிப் படகுகள் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வார இறுதிக்குள் பெரும் தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளிடம் இருக்கும் நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கவே சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 23, 2009

ஒவ்வொரு தமிழரும் வாசித்து செயல்பட வேண்டியது...


இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்தது, இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும், உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும், படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்".

ஜனவரி 18, 2009

பானவர்களே!

அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே
அன் வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி.

டியாக [Systematically] பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம் என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை.
எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்ப

அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான், அவற்றை அவிழ்த்துச் செல்வது எப்படி என்பது பற்றியும் நாம் சிந்திக்க முடியும்.

பெரும் இராணுவ சாதனையைப் படைத்து புலிகள் முன்னேறினாலும், அல்லது நிலைமை மேலும் சிக்கலாகி அவர்கள் பின்னடைந்தாலும் -

இதுவரை என்ன நடந்தது என்பதை உற்று நோக்குவது, இனிமேல் நாம் செயற்படும் போது என்ன முட்டுக்கட்டைகள் எம் வழியில் போடப்படும் என்பதை விளங்கிக்கொள்ளவும் அவற்றை மேவிக்கடந்து நாம் முன்னே செல்வது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கவும் உதவும்.

நிகழ்வு:

தமிழர்களுக்கு எதிரான இந்தச் சதிவலையை இந்தியாவும், மீதி உலகமும் [Rest of the world] இரண்டு முனைகளினூடாகப் பின்னுகின்றன.

முதலாவது - தமிழீழப் போர்க்களம். அது நேரடியான இராணுவப் படையெடுப்பு.

அடுத்தது - பன்னாட்டுப் போர்க்களம். அது இராஜதந்திர அரசியல் கபட நகர்வுகள்.

முதலாவது - பல கற்களை வீசியாவது ஒரே காயை வீழ்த்தும் நோக்கம்: இலக்கு விடுதலைப் புலிகள் இயக்கம்.

அடுத்தது - ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் எண்ணம்: இலக்கு பன்னாட்டுத் தமிழ் சமூகம்.

முதலாவதின் நோக்கம் - புலிகள் இயக்கத்தின் மரபு வழிப் போர்த் திறனை அழித்து, பின்னர் அதனை அரசியல் ரீதியாகவும் ஒதுக்கி - தமிழர்களை நேர்த்தியான அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்கிச் சிதைப்பது.

அடுத்ததின் நோக்கம் - வெளிநாட்டுத் தமிழர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்து, அரசியல் சக்தியற்றவர்களாக்கி, பின்னர் தமிழர்களது தேசியத் தன்மையையே சிதைப்பது.

இந்தப் போரில் பல பங்காளிகள் இருக்கின்றார்கள்: முதன்மைப் பங்காளி - இந்தியா; முக்கிய பங்காளி - மேற்குலகம்; உப-பங்காளி - மீதமுள்ள உலகம்.

இந்த இரண்டு போர்க் களங்களுமே அவற்றிற்குள் பல உப-முனைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு உடனடி இலக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது.

நோக்கம்:

இந்த இரண்டு போர்க் களங்களையும் சேர்ந்த ஒட்டுமொத்தமான போரின் இறுதி இலக்கு - தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைச் சிதைத்து, தமிழீழக் கோரிக்கையை அடிப்படை அற்றது ஆக்குவதாகும்.

ஆனால் ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடாத்துகின்றார்கள்?...

இந்தியா ஒரு காரணத்திற்காக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வேறொரு காரணத்திற்காக, மேற்குலகிற்கு எதிரான கிழக்குலகம் இன்னொரு காரணத்திற்காக, இஸ்லாமிய உலகம் வேறொரு காரணத்திற்காக நடாத்துகின்றார்கள்.

ஆனால் - சுருக்கமாக - எல்லோரும் சேர்ந்து, தம் சொந்த கேந்திர அரசியல் நலன்களிற்காக - சிங்கள இனத்தைப் பகடைக் காய்களாகப் பாவித்து, தமிழினத்திற்கு எதிராகப் படை எடுக்கின்றார்கள்.

இந்தப் போரை நடாத்துகின்றவர்கள் மிகத் தெளிவாக ஒழுங்கமைத்து - நன்கு திட்டமிட்ட வழிமுறைகளினூடாக - படிப்படியாக, நிதானமாக அதைச் செய்கின்றார்கள்.

அதனால் - இந்தப் போருக்கு உட்பட்டு இருக்கின்ற தமிழர்களாகிய நாங்கள் இந்தச் சர்வதேசச் சதியின் பரிமாணங்களைப் போதிய ஆழத்திற்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதுவரை காய்கள் எப்படி நகர்த்தப்பட்டன, இப்போது எப்படி நகர்த்தப்படுகின்றன என்பதை மிகவும் நுணுக்கமாகவும், நெருக்கமாகவும் நோக்கி நாம் ஆராய வேண்டும்.

அப்போது தான் - இனிமேல் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியும்.

நகர்வு - 1:

2001 இன் சூழலைப் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனையிறவை வீழ்த்தி, புலிகள் முகமாலை வரை முன்னேறியதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது.

போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் கை என்றுமில்லாத அளவிற்கு ஓங்கியிருந்ததும், பொருளாதாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கை என்றுமில்லாத அளவிற்குத் தாழ்ந்திருந்தது மேற்குலகத்திற்கப் பிடிக்கவில்லை.

புலிகளின் போர் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் அப்போது அதற்கு இருந்த ஒரே உடனடி வழி - சண்டையை நிறுத்த வைத்துப் புலிகளைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவது தான்.

2002 இல் - இந்தியாவின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்துடனும், மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவுடனும் சமரச முயற்சிகள் ஆரம்பமாகின. அனுசரணையாளர் ஆகியது நோர்வே; இணைத் தலைமை நாடுகள் என அதனுடன் கூடிக் கொண்டன அமெரிக்காவும், யூரோப்பின் யூனியனும், ஜப்பானும்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் எழுதப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது - எல்லைகளை வரையறுத்து, பிரதேசங்களை அங்கீகரித்து - விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது முகாமைத்துவக் கட்டமைப்பினை ஒரு நடைமுறை அரசாங்கமாகவே [De-Facto State] அங்கீகரித்தது.

இந்த வரலாற்றுப் புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்துருவாக்கிய பெருமை பாலா அண்ணையையே சேரும். இருந்தாலும், அவரது எண்ணங்களுக்கு இடமளித்து - கடல் தொடர்பான விவகாரங்கள் தவிர வேறு எதற்கும் முட்டுக்கட்டைகள் போடாமல் - உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு அனுசரணைகள் செய்தது மேற்குலகம்.

அதற்கு ஒரு மௌனப் புன்னகையோடு ஒப்புதல் கொடுத்தது இந்தியா.

போர்ச் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்திவிட்டு தமிழ் தேசியப் போராட்டத்திற்கு சமரச வழியில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் இறங்கினர் விடுதலைப் புலிகள்.

மேற்குலகம் நியாயத்துடன் செயற்படும் என்று நம்பினர் தமிழ் மக்கள்.

நகர்வு - 2:

ஆனால் - இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படும் வரை நல்லவர்களாக நடித்து, ஆசீர்வாதங்கள் வழங்கி, அனுசரணைகள் செய்த மேற்குலகம், அது நடைமுறைக்கு வந்த பின்னர் தமது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது.

ஓன்றன் பின் ஒன்றாக - தமிழர்களுக்குப் பாதகமான விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. சிலவற்றை சிறிலங்கா அரசும், சிலவற்றை மீதி-உலகமும், சிலவற்றை இருதரப்பும் சேர்ந்தும் அரங்கேற்றினர்.

1) போர் நிறுத்த உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டபடி, சிறிலங்கா அரசு -

  • உயர்-பாதுகாப்பு வலயங்களை நீக்கவில்லை.
  • பாடசாலைகளிலும், வீடுகளிலும், கோவில்களிலும் குடியிருந்த தமது படையினரை அகற்றவில்லை.
  • போரினால் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கவில்லை.
  • மீள்-கட்டுமான மற்றும் புனர்-வாழ்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட உப-குழுக்கள் செயற்பட இடமளிக்கவில்லை.
  • அந்த உப-குழுக்களால் கண்டறியப்பட்ட 75 வரையான வேலைத் திட்டங்களில் எதனையும் செய்ய உடன்படவில்லை.

2) விடுதலைப் புலிகளின் கடற்-கலங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டனர்.

3) இவ்வளவும் நடந்துகொண்டிருந்த போது - நோர்வேயோ அல்லது இணைத் தலைமை நாடுகளோ, உடன்பட்ட விடயங்களைச் செய்து முடிக்கும் படி சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்கள் போடவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

இந்த நேரத்தில் -

உடன்படிக்கையிலும், அதுவரை நடந்து முடிந்த பேச்சுக்களிலும் ஒப்புக்கொண்ட விடயங்கள் நடக்காதவரை, மீதிச் சுற்றுப் பேச்சுக்களுக்குப் போவதில் பயனேதும் இல்லை என முடிவுக்கு வந்தனர் புலிகள்.

இந்த இடத்தில் தான் - மேற்குலகம் அதிர்ச்சியடைந்தது.

சண்டை நிறுத்தத்தை முறித்துக்கொண்டு, புலிகள் மீண்டும் போருக்குப் போய் விடுவார்களோ என்று அது திகைப்புற்றது. புலிகள் திரும்பவும் போருக்குப் போனால், 2001 ஆம் ஆண்டின் கள நிலவரங்கள் தொடர்ந்தால், போர் வலுச் சமநிலையில் புலிகளின் கை இன்னும் ஓங்கினால், சிறிலங்காவின் 'சீர்நிலை" [Stability] குலைக்கப்பட்டால், அதன் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியுற்றால்... விளைவு என்னவாகிவிடுமோ என்று கவலையுற்றது மேற்குலகம்.

தமிழ் தேசியம் மீண்டும் பேரெழுச்சி பெற்றுவிடுமோ என்று அச்சமுற்றது இந்தியா.

ஆனால் - புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செவ்வனே நடைமுறைப்படுத்தி, சொன்னவற்றைச் செய்யுமாறு சிறிலங்கா அரசின் மேல் அழுத்தங்களைப்; போடுவதற்குப் பதிலாக -

எது நடந்தாலும் அந்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருக்கப் புலிகள் மீது மட்டும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வழிமுறையை இந்த உலகம் கையாண்டது.

அதை அது படிப்படியாகச் செய்தது.

நகர்வு - 3:

முதற் படியாக - அடிப்படையாக - தடைசெய்யப்பட்ட ஒர் அமைப்பாகப் புலிகள் இயக்கத்தின் மீது அனைத்துலக ரீதியாக சட்டங்களைக் கொண்டு வந்தது இந்த உலகம்.

இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்னர் இரண்டு நாடுகள் மட்டுமே புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" என்ற வரைமுறைக்குள் அடக்கியிருந்தன.

ஒன்று - இந்திய;அடுத்தது - அமெரிக்கா.

இப்போது -

அரசியல் சமரச முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, அவர்களை ஒரு 'பயங்கரவாத" இயக்கமாக ஏனைய மேற்கு நாடுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன.

பிரிட்டன், யூரோப்பியன் யூனியன், கனடா, ஓஸ்ரேலியா என ஒவ்வொரு நாடுகளாக, மேற்குலகம் புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கியது.

போரை நிறுத்திவிட்டு, தமிழரது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இயக்கத்தைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு நியாயமான எந்த ஒரு காரணமும் இந்த நாடுகளுக்கு இருக்கவில்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - தமது நலன்களுக்கு எதிராக என்றும் செயற்படாத - ஒர் அமைப்பைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு எந்தத் தேவையும் இந்த நாடுகளுக்கு இல்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

எல்லாவற்றுக்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

புலிகள் இயக்கம் மீதான இந்தத் தடை ஒரு Cluster-குண்டு போன்றது. ஒரே பெரிய குண்டு பலவாகப் பரிந்து பல முனைகளில் தாக்குவதைப் போல, பல்பரிமாண நோக்கம் கொண்டது.

நகர்வு - 4:

இந்தத் தொடர் தடைகளின் தொடர்ச்சியாக -

'புரிந்துணர்வு உடன்படிக்கை"யின் ஒரு தரப்பை 'அரசாங்க"மாகவும், அடுத்த தரப்பைப் 'பயங்கரவாதிக"ளாகவும் தரம் பிரித்து நடாத்த ஆரம்பித்தது உலகு.

'யுத்த நிறுத்தம்" நடைமுறையில் இருந்த போதே கொண்டுவரப்பட்ட இந்தப் 'பயங்கரவாத"ப் பட்டியலிடுதல்களின் உடனடி நோக்கம் -

  • சமரச முயற்சியிலேயே ஈடுபட்டிருங்கள் என புலிகள் இயக்கத்தை அழுத்துவது.
  • பேச்சு மேசையில் கிடைப்பதை வாங்குங்கள் எனப் புலிகளை நிர்ப்பந்தம் செய்வது.
  • சிறிலங்கா அரசு உடன்பாட்டின்படி செய்யாது விடினும் சமரச முயற்சியிலிருந்து விலகாமலிருக்கப் புலிகளை எச்சரிக்கை செய்வது.
  • சமரச முயற்சிகளிலிருந்து விலகினால் எதிர்காலம் எல்லா வகையிலும் கடுமையானதாக அமையும் எனப் புலிகள் இயக்கத்தைப் பயமுறுத்தல் செய்வது.

அதே நேரத்தில் -

இந்தப் 'பயங்கரவாத'ப் பெயர் சூட்டல்களின் பின்னாலிருந்த நீண்டகால உள்நோக்கம் -

மேற்சொல்லப்பட்ட எல்லாவற்றையும் மீறிப் புலிகள் புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகினாலோ, அல்லது சிறிலங்கா அரசாங்கமே போரை ஆரம்பித்தாலோ -

  • ஒன்று - உள்நாட்டில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடாத்தும் சிறிலங்கா அரசுக்கு அனைத்து போர்-தொடர்புபட்ட உதவிகளையும் செய்வது.
  • இரண்டு - அனைத்துலக ரீதியாக, தத்;தமது நாடுகளிலிருக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு எவ்வித உதவிகளும் போகாமல் தடுப்பது.
  • மூன்றாவதும், முக்கியமானதும் - வெளிநாட்டுத் தமிழர்கள் மீது அழுத்தங்கள் போட்டும், உள்நாட்டுத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியும் - அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிப்பது.

நகர்வு - 5:

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது, இரண்டு தரப்பையும் சம பங்காளிகளாக்கி, படைவலுச் சமநிலையைப் பேணுவதற்கு இரு தரப்பிற்கும் இடமளித்திருந்தது.

ஆனால் - புலிகள் இயக்கம் தமது படை பலத்தைப் பேணுவதற்கு எல்லாவகையான முட்டுக்கட்டைகளையும், எல்லா வழிகளிலும் போட்டுக்கொண்டு, மறு புறத்தில் -

சிறிலங்காவின் பொருளாதாரத்தையும், அதன் இராணுவ இயந்திரத்தையும் முழுமையாகப் பலப்படுத்தும் காரியங்களை இந்தியாவும், மீதி உலகமும் மும்முரமாகச் செய்தன.

அதாவது - ஒரு பக்கத்தில், சீர்குலைந்து போயிருந்த சிறிலங்காவின் படைத்துறை, சமரச முயற்சிகள் ஆரம்பித்து மூன்று வருடங்களிலேயே முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டுவிட, மறு பக்கத்தில், புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ச்சியாகத் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

போர்க் களம்:

முன்னரே போரை எதிர்பார்த்து - அதற்கு முன்னேற்பாடாக இவ்வளவு நகர்வுகளும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, மிகத் துல்லியமாகச் செயலாக்கப்பட்ட பின்பு -

உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக - இரண்டு போர்க் களங்களைத் தமிழர்களுக்கு எதிராகத் திறந்தன சிறிலங்காவும், மீதி உலகமும்.

பி.ஜே.பி-யின் ஆட்சி முடிவுக்கு வந்து, சோனியா அம்மையாரின் காங்கிரஸ் ஆட்சியல் ஏறியது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின்னர் - நல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த பின்னர் - ஓரளவுக்கு நேரடியான தலையீட்டை ஆரம்பித்தது இந்தியா.

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கும், அதன் அணு குண்டுக்கும் பயந்ததைவிட, பிரபாகரனின் மனவுறுதிக்கும், அவரது தலைமையில் எழுச்சிகொண்ட தமிழ் தேசியத்திற்கும் பயந்தது காங்கிரசின் இந்தியா.

இதுவரையும் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கு - பின்னாலே இருந்து ஆசிகள் தந்த இந்தியா, இப்போது, சோனியா அம்மையரின் தலைமையில் - மெல்ல மெல்ல - தானே தலைமை ஆட்டக்காரன் ஆகியது.

பூதாகரமாய் உருவெடுத்த சைனாவை எதிர்கொள்ள வழி தேடிக்கொண்டிருந்த மேற்குலகம், இன்னொரு பூதமாய் வளர்ந்த இந்தியாவோடு - வேறு வழியின்றித் தோள் சேர்ந்தது.

தமிழர்களுக்கு எதிரான போர்க் களங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் திறக்கப்பட்ட போது - தென்னாசியாவில், இந்தியாவின் விருப்பமே மேற்குலகின் விருப்பம் ஆனது.

முதலாவது களம்:

தமிழீழப் போர்க் களம். அதன் அகன்ற பரிமாணங்கள் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அது நேரடி யுத்தம். மிக வெளிப்படையானது. முழுமையாக இராணுவ மயப்பட்டது. புலிகளின் மரபுவழிப் போர்வலுவை நிர்மூலம் செய்து, அவர்களது அரசியல் சக்தியையும் அழிக்கும் இலக்கைக் கொண்டது. மறைமுகக் காரணிகள் என பெரிதாக எதுவும் அற்றது.

புலிகளைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கிவிட்டு, "பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் - உலகமே பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றது.

பணத்தை வழங்கி, ஆயுதங்களை வழங்கி, போரியல் ஆலோசனைகளை வழங்கி, போர்க் கருவிகளையும் அவற்றை இயக்குவதற்கு ஆட்களையும் வழங்கி, வானூர்தி ஒட்டிகளை வழங்கி, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கி, வெளிநாட்டுத் தமிழர்கள் மீது சட்ட அழுத்தங்களைப் போட்டு - எல்லோருமாகப் பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றனர்.

அந்த நேரடிப் போர்க் களத்தைப் புலிகள் தான் வெல்ல வேண்டும். ஆனால், அந்தக் களத்தில் அவர்கள் வெல்லுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் எம்மாலான எல்லா வழிகளிலும் நாம் தான் செய்ய வேண்டும். அதனைத் தவிர, அதன் ஆழமான போரியல் விபரங்களில் நாம் கவனம் செலுத்துவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.

அடுத்த களம்:

அனைத்துலகப் போர்க் களம். தமிழீழத்திற்கு வெளியே திறக்கப்பட்டிருக்கும் இந்தக் களத்தைத் தான் நாம் ஆழமாக - அலகு அலகாகப் பிரித்து - உற்று நோக்க வேண்டும்.

ஏனெனில் - இது தான் நமக்கான களம். நாம் போராட வேண்டிய களம். நாமே வெல்ல வேண்டிய களம். புலிகளை நம்பியிருக்கத் தேவையில்லாத களம்.

தமிழர்களது தேசிய சுய நிர்ணய உரிமைக்கு [National Self-Determination] ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதும், தமிழர்களுக்கு எனத் தமிழீழத் தனியரசை அமைப்பதுமே எமது அரசியல் இலட்சியம்.

அந்த இலட்சியத்தை அடைவதற்காகவே விடுதலைப் புலிகள் இயக்கமும் - எமது சார்பில் - ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

தமிழர்கள் தமது தனியரசுக் கோரிக்கையை சர்வதேச அளவில் முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கு நேரடியான எந்த வழியும் இல்லாத நிலையில், இந்த உலகு வேறு மார்க்கத்தைத் தேடியது.

அது கண்டுபிடித்த ஒரு வழி தான் - புலிகள் இயக்கத்தின் மீது உலகெங்கும் கொண்டுவரப்பட்ட அந்த Cluster-குண்டு பாணியிலான தடை. அந்த தடையின் ஒர் இலக்கு - தமிழர்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்படும் 'தமிழீழம்" என்ற கோட்பாடு.

அதே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளைப் 'பயங்கரவாத" இயக்கம் ஆக்கியதன் மூலமாக -

தனியரசைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும் - அவை நியாயபூர்வமான அபிலாசைகளாக [Legitimate Aspirations] இருந்தாலும் - அதே கோட்பாடுகளை ஒரு 'பயங்கரவாத" இயக்கமும் முன்வைப்பதால் -

அந்தக் கோட்பாடுகளை முன்னெடுப்பதே ஒரு பயங்கரவாத இயக்கத்தின் கருத்தை முன்வைப்பது போன்றதாகும் எனும் விதமான ஒர் அச்சச் சூழலை வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் இந்த உலகு உருவாக்கியது.

அந்த வகையில் - தமிழீழத்தைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும், இந்த உலகம் ஏற்றுக்கொள்ள மாட்டாத ஒரு கோட்பாடு என்ற ஒரு கருத்தையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி, அதனை நிராகரித்தது.

இதன் மூலமாக - தமிழீழம் பற்றிப் பேசினாலே 'பயங்கரவாத"ப் பட்டம் சூட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தையும், அந்தப் பட்டம் சூட்டப்பட்டுவிட்டால் வேறு கருத்துக்கள் கூட சொல்ல முடியாமல் நாம் நிராகரிக்கப்பட்டுவிடுவோம் என்ற தயக்கத்தையும் தமது நாட்டுப் பிரஜைகளாக உள்ள தமிழர்கள் மத்தியிலேயே உருவாக்கியது.

இதன் விளைவாக - தமது சொந்த நாட்டுப் பிரசைகளுக்கே, அவர்கள் தமது உணர்வுகளையும், அபிலாசைகளையும் வெளிப்படுத்துவதற்கும், பேசுவதற்கும் உள்ள சுதந்திரத்திற்கு [Freedom of Speech and Freedom of Expression] அந்தந்த நாட்டு அரசுகளே முட்டுக்கட்டைகளைப் போட்டன.

இவற்றின் முடிவாக - தமிழர்களுக்காக தமிழர்களுக்குள் நடாத்தப்படும் கூட்டங்களில் தமிழீழம் பற்றியும், புலிகள் இயக்கம் பற்றியும் வானுயரப் புகழும் நாங்கள், அதை உண்மையிலேயே சொல்ல வேண்டிய எங்களது நாட்டு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களில், எதுவும் சொல்ல முடியாதவர்களாய் வாயடைக்கப்பட்டோம்.

இவ்வாறான சூழலில் தான் - தமிழீழம் பற்றிப் பேசினால் தமது பேச்ச எடுபடாது என்ற முடிவுக்கு வந்த எமது வெளிநாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் தத்தமது நாட்டு அரசுகளை அணுகுவதற்குப் புதிய ஒரு தந்திரோபாயத்தைக் கையிலெடுத்தார்கள்.

அது என்னவெனில் - எமக்குத் தேவையானதாக இருந்தாலும், மேற்குலகத்திற்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, எமக்கு முக்கியமற்றதாக இருந்தாலும் மேற்குலகத்திற்குப் பிடித்த விடயங்களை மட்டுமே மேற்குலகத்துடன் பேசுவது.

அதாவது - தமிழ் தேசிய இனப் போராட்டத்தின் நிரந்தர முடிவுக்கான எமது அடிப்படை அரசியல் இலட்சியம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, அந்தப் போராட்டத்தின் வழியில் நாம் சந்திக்கும் துன்பங்களைப் பற்றிய தற்காலிக மனிதாபிமானப் பிரச்சனைகளை [Humanitarian Crisis] பற்றி மட்டும் பேசுவது.

இந்த இடத்தில் தான் -

தனது ஆறு ஆண்டுகாலம் நீண்ட - பொறுமையான - நுட்பம் மிகுந்த - நகர்வுகளினதும், நடவடிக்கைகளினதும் துல்லியமான வெற்றியை மேற்குலகம் பெற்றது.

மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவி வேண்டி நாம் அதன் காலடியில் விழ வேண்டும் என அது காத்திருந்தது. அப்படி விழுந்து - நாங்கள் அவற்றைச் சார்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. அப்படிச் சார்ந்திருந்து - அது சொல்வதையே கேட்கும் ஒரு நிர்ப்பந்த சூழலுக்குள் எம்மைச் சிக்க வைக்க அது விரும்பியிருந்தது.

அப்படியாக - மனிதாபிமானப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசும் முடிவை நாம் எடுத்த போது, தனது விருப்பத்தில் வெற்றி கண்ட மேற்குலகு, எம் மீது ஒரு மாய வலையை விரித்தது.

எமது கஸ்டங்களைச் சொல்லி நாம் அழும் போது அக்கறையோடு கேட்பது போல நாடகமாடியது. தனக்கு ஏற்கெனவே தெரிந்த விடயங்களையே - நாம் சொல்லும் போது - ஏதோ புதிதாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்தது.

நாமும் - 'மேற்குலகிற்குப் பிடித்த விடயங்களைப் பேசும் போது அது அக்கறையோடு கேட்கின்றதே" என்று, அதற்குத் தெரிந்த விடயங்களையே பேசிப் பேசி, கடைசியில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லுவதை விடுத்துவிட்டு, மேற்குலகத்திற்கு என்ன பிடித்ததோ அதை மட்டுமே பேசப் பழகிக்கொண்டோம்.

இப்பொழுது -

முப்பது ஆண்டு காலம் போராடியதன் பின்பு, நூறாயிரம் மக்களை உயிர்ப்பலி கொடுத்த பின்பு, இருபத்தி மூவாயிரம் பேராளிகளது கல்லறையின் மேல் நின்று கொண்டு -

"தமிழீழத் தனியரசு" பற்றிப் பேசுவதை நாங்கள் தவிர்க்கின்றோம். தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கு நாங்கள் தயங்குகின்றோம். "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே எமது ஏக அரசியல் பிரதிநிதிகள்" என்று வெளிப்படையாகச் சொல்லுவதற்குப் பின்னடிக்கின்றோம்.

சொல்லப்பட வேண்டிய இவற்றைச் சொல்லி, எமக்கான அங்கீகாரத்தைத் தலைநிமிர்ந்து கோருவதைத் தவிர்த்துவிட்டு - உணவும், உடையும், மருந்தும், போர் நிறுத்தமும் வேண்டி - பிச்சைக்காரர்கள் போல - உலகத்தின் முற்றத்தில் கையேந்தி நிற்கின்றோம்.

வன்னித் தமிழர்கள் அழிகின்றார்கள், கிழக்குத் தமிழர்கள் படுகொலையாகின்றார்கள், வடக்குத் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள், கொழும்புத் தமிழர்கள் காணாமல் போகின்றார்கள், மலையகத் தமிழர்கள் கைதாகின்றார்கள் என்று உலகத் தமிழர்கள் நாம் புலம்பி அழுகின்றோம்.

இந்த உலகத்திற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் எங்கள் துயரங்களைத் திரும்பவும் சொல்லுவதற்காக - ஊர்வலங்கள் வைத்து, மட்டைகள் பிடித்து, கோசங்கள் எழுப்பி, கடிதங்கள் எழுதி, மனுக்கள் அனுப்பி - எம்மையே நாம் ஏமாற்றுகின்றோம்.

போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம்.

பிரபாகரனும் அவருடைய போர் வீரர்களும் தலை குனியாது நிகழ்த்தும் கம்பீர யுத்தத்தின் தார்ப்பரியங்களை நாம் கேவலப்படுத்துகின்றோம்.

ஆனால் - இந்த நாளுக்காகத்தான் இந்த உலகமும், காங்கிரசின் இந்தியாவும் காத்திருந்தன, தமது கடைசி நகர்வை மேற்கொள்வதற்காக.

அந்தக் கடைசி நகர்வு தான் - புலிகள் இயக்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட அந்த Cluster-குண்டு பாணியிலான உலகத்-தடையின் கடைசி இலக்கு.

அது - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புலிகளிடமிருந்து பிரிப்பது; உள்நாட்டில் வாழும் தமிழர்களின் மீது போலித் தீர்வு ஒன்றைத் திணிப்பது.

ஒரு புறம் - மனிதாபிமானப் பிரச்சனைகளைச் சொல்லித் தம்மைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்களை, மானிட நேய முகத்தைக் காட்டி மயக்கியது இந்த உலகம்.

மறு புறம் - 'ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என்று பொங்கியெழுந்த தமிழகத் தமிழர்களை, 'இதோ முகர்ஜியை அனுப்புகின்றோம், மேனன் போயிருக்கின்றார்" என்று கூறியே அடக்கியது இந்தியா.

இப்போது -

தமிழர்களின் அவலங்களைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மேற்குலகும், அவர்களை அழிவிலிருந்து காப்பதாகக் கூறிக்கொண்டு இந்தியாவும் காலத்தை இழுத்தடிக்கின்றன.

கிளிநொச்சியின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து, ஆனையிறவின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து - இப்போது, முல்லைத்தீவினதும், புதுக்குடியிருப்பினதும் வீழ்ச்சிக்காய் காத்திருக்கின்றன.

முப்படைகளையும், நெடுந்தூரப் பீரங்கிகளையும் வைத்திருக்கும் புலிகளின் மரபுவழிப் போர்வலுவை உடைத்து, மீண்டும் அவர்களை ஒரு கெரில்லாப் படையாக காட்டிற்குள் பதுங்க வைக்கும் நம்பிக்கையோடு, சிறிலங்காவுக்கு காலத்தை எடுத்துக் கொடுக்கின்றன.

அதே நேரத்தில் - இன்னொரு பக்கத்தில் - விடுதலைப் புலிகளோடு இருக்கும் வரை தமிழர்களது துன்பங்கள் எதுவும் நீங்கப் போவதில்லை என்ற சமிக்ஞையை கொடுத்து -

'புலிகள் அழிந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் நல்ல தீர்வைப் பெற்றுத் தருகின்றோம், நீங்கள் புலிகளை விட்டு விலகுங்கள்" என்று தமிழர்களுக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.

இந்த அணுகுமுறையோடு -

முதலாவது, அது சரிவராமல் போனால் அடுத்தது என இரண்டு நோக்கங்களோடு இந்தியாவும் இந்த உலகமும் செயற்படுகின்றன:

  • புலிகளிடமிருந்து தமிழர்களையும், தமிழர்களிடமிருந்து புலிகளையும் பிரித்து, விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பது. உதவிகள் போகாமல் நிர்க்கதியாகி நிற்கும் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பது. புலிகள் அழிந்த பின் - கேட்பதற்கு யாருமற்ற நிலையில் தமிழர்கள் இருக்கும் போது, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை அவர்கள் மீது திணிப்பது.
  • வெளிநாட்டுத் தமிழர்களது நிதியுதவியில் தான் புலிகள் இயக்கம் தங்கியிருக்கின்றது என்பதால், வெளிநாட்டுத் தமிழர்களைக் கபடமாய்க் கவர்ந்து, அவர்கள் மூலமாக புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் போடுவது. அந்த அழுத்தத்தின் மூலமாக – விடுதலைப் புலிகளைத் தமது வழிக்குக் கொண்டு வந்து, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை ஏற்க வைப்பது.
    இந்த இரண்டு நோக்கங்களில், ஏதாவது ஒன்றை அடையும் எண்ணத்தோடு தான் இந்தியாவும், இந்த உலகமும் இப்போது செயற்படுகின்றன.

இப்போது -

உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்ற அந்த மிக முக்கியமான கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்போம்.

இந்தியாவில் காங்கிறஸ் ஆட்சி இறங்கினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ, அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ எமக்கு இப்போது நேரம் இல்லை.

விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிக்காகக் காத்திருக்கவும் எமக்கு இனி நேரம் இல்லை.

போராட்டத்தை உடனடியாக நாமே கையில் எடுப்போம்.

சரியான நகர்வுகளை நாம் தெளிவாக மேற்கொண்டால், புலிகளின் போர் வெற்றிக்கே நாம் வழியமைக்கலாம்.

அல்லது - நாம் காத்திருப்பதைப்போல, புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் இராணுவ வெற்றியைச் சாதித்தால், அதற்கெதிராக இந்த உலகமும், காங்கிரசின் இந்தியாவும் முன்னரைப் போல குறுக்கே வர முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம்.

எப்படி?

எம் முன்னால் இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. அடுத்தது, மிக உடனடியாகச் செய்யப்பட வேண்டியது.

உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை என்ன என்ன என்பதை நீங்களும் சிந்தித்து எமக்கு எழுதுங்கள், நானும் சிந்திக்கின்றேன்.

அவற்றைச் சிந்திக்கின்ற அதே வேளையில், பெரிதாகச் சிந்தனை எதுவும் தேவைப்படாத - மிக உடனடியாகச் செய்;யப்பட வேண்டிய பணியை இப்போதே சொல்லிவிடுகின்றேன்.

சுருக்கமாகச் செல்வதானால் - உலகெங்கும் இருக்கும் இந்தியத் தூதுவரகங்களைத் தமிழர்கள் உடனடியாக 'முற்றுகை" இட வேண்டும்.

இங்கே நான் 'முற்றுகை" என்று குறிப்பிடுவது மனிதர்கள் கூடி வளைப்பதை மட்டுமல்ல. எம் எண்ணங்களால், கருத்துக்களால், ஆக்கபூர்வமான செயல்களால் முற்றுகை இட வேண்டும்.

எமது பிரச்சனையில் இந்தியாவே இப்போது முதன்மையானதும் முக்கியமானதுமான ஆட்டக்காரர்: தமிழர் போராட்டத்தை இந்தியா எதிர்த்தால், முழு மேற்குலகமும் எதிர்க்கும்; இந்தியா அங்கீகரித்தால், முழு மேற்குலகமும் ஆதரிக்கும்.

தென்னாசியாவில் இன்று இந்தியாவே எல்லாம்: இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தின் அலை கூட அசையப் போவதில்லை.

பாகிஸ்தானோடு பரவசப்பட்டு, சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக -

ஒன்று - 'எங்கள் நாட்டுப் பிரதமரைக் கொன்றவர்களை நாம் சும்மாவிடுவதா?" என்ற காங்கிரஸ் காரர்களின் அர்த்தமற்ற வரட்டுக் கௌரவம்.

அடுத்தது - தமிழீழத் தனிநாடு தென்னிந்தியாவில் தனியரசுக் கிளர்ச்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையற்ற பயம்.

தனது தென் கோடியில் ஒரு பெரும் காப்பரனாகவும், என்றும் தளம்பல் அற்ற ஒரு வரலாற்று நண்பனாகவும் இருக்கக்கூடிய ஒரு மக்கள் இனத்தை அழிக்க இந்தியா இன்று முன்னின்று முயல்வதற்கு வேறு எந்த உருப்படியான காரணமும் இல்லை.

செய்தி:

முக்கியமான மூன்றே மூன்று விடயங்களை இந்தியாவிடம் நாம் - மீண்டும் மீண்டும் - எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும்.

அந்த மூன்று விடயங்களையும் செய்யுமாறு - கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சியாகப் பிரயோகிக்க வேண்டும்.

  • தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள்:
    அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:
    வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ளப் போவதில்லை.
    இந்தியாவின் நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.
    புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள்.
  • சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:
    கருவிகள், உளவுத் தகவல்கள், ஆளணி, ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.
    சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.


செயல் - 1:

உலகிலுள்ள ஒவ்வொரு இந்தியத் தூதுவரகத்தையும் நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களும், இளையோர் அமைப்புக்களும் தேர்ந்த பிரதிநிதிகள் குழக்களை [Delegations] உருவாக்கி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களைச் சந்தித்து இந்த மூன்று விடயங்களையும் வற்புறுத்த வேண்டும். இன்றே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ போய்விட்டு விட்டுவிடாமல், தொடர்ச்சியாக - மாதத்தில் இரு தடவையாவது - செல்ல வேண்டும். இந்தியத் தூதுவரகங்கள் மீது அழுத்தங்களை இடைவிடாது போட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாமும் ஓயப் போவதில்லை என்ற தெளிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

தற்போதைய போரை நிறுத்துவது பற்றியும், வன்னி மக்கள் எதிர்கொண்டு நிற்கும் மனிதப் பேரவலத்தைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரும் இனப் படுகொலை ஆபத்தைப் பற்றியும் சொல்லுகின்ற அதே வேளையில் -

இந்த ஒவ்வொரு சந்திப்பினதும் கடைசி 40 வீதமான நேரம், மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த மூன்று விடயங்களயும் நாம் முன்வைக்கும் போது - பல மழுப்பல் கதைகளை இந்திய தூதுவர்களும், அங்குள்ள அதிகாரிகளும் எமக்குச் சொல்லுவார்கள்.

"சோனியா காந்தி இருக்கும் வரை இவை எதையும் செய்ய முடியாது," "அவர் பழைய கோபத்தில் இருக்கின்றார்," "டெல்லியிலுள்ள காங்கிறஸ் தலைவர்கள் இவற்றுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்," "பிரபாகரன் மீது எல்லோரும் கோபத்தில் இருக்கின்றார்கள்," என்ற விதமாக ஆயிரத்தெட்டுக் கதைகளை அடுக்குவார்கள்.

"பிரபாகரன் இல்லாமல் போனால் அடுத்ததாக யார் வருவினம்?," "அடுத்த இடத்தில யார் இருக்கினம் என்று?" என்று கேள்விகள் கேட்பார்கள். ஏதோ, பிரபாகரன் இல்லாமல் போனால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எமக்கு ஊட்டுவது போல நடிப்பார்கள்.

ஆனால், நாங்கள் மயக்கமடையாமல், திடமாகவும், ஒரே சீராகவும் இருந்து, தொடர்ச்சியாக எமது அந்த மூன்று கோரிக்கைகளையும் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும்.

செயல் - 2:

இந்தியத் தூதுவரகங்களின் முன்னால், இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்தி பேரணிகளை தொடர்ந்து நிகழ்த்த ஆரம்பிக்க வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாள்களும், இளையோர் அமைப்புக்களும் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது ஆயிரம் பேராவது ஒவ்வொரு தடவையும் அங்கு திரள வேண்டும். பேரணிகளின் முடிவில், தூதுவரையும், தூதுவரக அதிகாரிகளையும் வெளியில் அழைத்து எமது கோரிக்கைகளைக் கையளிக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால், நாம் அடங்கிப் போக மாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.

ஆனால், இந்தப் பேரணிகளின் முக்கியத்துவம் இவை அல்ல -

முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவு, அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி வெளிநாட்டு ஊடகங்களை [Foriegn Medias] அந்த நிகழ்வுக்கு வரவைப்பதிலும், அந்தப் பேரணிகள் பற்றிய செய்திகளை வெளியிட வைப்பதிலும் செலவிடப்படவேண்டும்.

பேரணிகளை வைத்துவிட்டு, சும்மா "புதினத்"திலும், "தமிழ்நெற்"றிலும் மட்டும் "சங்கதி"களைப் "பதிவு" செய்து, படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.

அந்தந்த நாடுகளிலுள்ள தமிழர்களது-அல்லாத ஊடகங்களை [Non-Tamil Medias] அங்கு வரவழைக்க வேண்டும். எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் அவர்களுக்கு விளக்கி - வலியுறுத்தி - அந்த ஊடகங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

பன்னாட்டு ஊடகச் செய்திகள் தான் இந்தியாவின் மீதும், இந்தியத் தூதுவர்கள் மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும். அதே வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தான் அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்கும். ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கும், அந்தந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.

எந்த ஒரு மாபெரும் பேரணியின் வெற்றியும், பலனும் - அந்தப் பேரணிக்குப் பன்னாட்டு ஊடகங்களில் கிடைக்கும் இடத்தில் தான் தங்கியுள்ளது.

செயல் - 3:

கும்பல் கும்பலாக மின்னஞ்சல்களை அனுப்புவது எந்தப் பலனையும் தராது. அவற்றைத் திறந்து பார்க்கவே மாட்டார்கள். திறக்காமலேயே "குப்பைத் தொட்டி"க்கள் போட்டுவிடுவார்கள்.

தாள்களில் கடிதங்களை எழுதி இந்தியத் தூதுவரகங்களுக்கு இலட்சக் கணக்கில் நாம் அனுப்ப வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ் செயற்பாட்டாள்கள், இளையோர் அமைப்புகளது துணையுடன் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

சோனியா காந்தி அம்மையாருக்கும், மன்மோகன் சிங் ஐயாவுக்கும், அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களுக்கும் - சுருக்கமான ஒரு பக்கக் கடிதங்களைத் தனித்தனியாக எழுதி, உறைகளில் இட்டு இலட்சக் கணக்கில் அனுப்ப வேண்டும்.

அவ்வளவு பிரமாண்டமான தொகையில் வந்து குவியும் கடிதங்களை அவர்கள் திறந்து பார்த்தே ஆக வேண்டும். அவை அவர்களை ஏதோ ஒரு வகையிலான நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும்.

முக்கியமாக - அந்தக் கடிதங்கள் எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் உறுதியாக வலியுறுத்த வேண்டும்: தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசின் வேறு எந்த அணுகு முறையையோ அல்லது நடவடிக்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

தமிழீழத்தின் பிறப்பே இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆதாரபூர்வமாக வலியுறுத்த வேண்டும்.

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

Monday, April 20, 2009

இதுவரை 1500 மக்கள் கொலை பாதுகாப்பு வலையத்தில்

http://www.globaltamilnews.net/tamil_news....=8586&cat=1

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

எளிய மருத்துவக் குறிப்புகள்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான்சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூ தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19)முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்குதாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95)நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96)வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

மூலம்: தமிழ் சித்தமருத்துவக் கழகம்

Source : http://www.darulsafa.com/www/Health/health_tips.htm

Saturday, April 18, 2009

நியூயார்க் டைம்ஸ் இல் தமிழர் நிலைமை

நியூயார்க் டைம்ஸ் வந்த தமிழர் நிலைமை ..செர்போனிக்க நிலை இலங்கையில் ..
மேலும் வசிக்க ..




Is the World Ignoring Sri Lanka’s Srebrenica?

Thursday, April 16, 2009

பி பி சி ௪ இல் தமிழின அழிப்பு பற்றிய பார்வை

பி பி சி சேவை நான்கில் தமிழின அழிப்பு பார்வை காணொளி ..

http://www.nankooram.com/channel-4-news-vanni-killings
http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=19918256001

ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்பட்ட ஒரு அனுபவமும் அதன் மூலம் மற்றவர்கள் ஆபத்து காலத்தில் செய்யவேண்டிய அவசர நடவடிக்கைகள்

மாரடைப்பில் அவதிப்பட்ட பெண்ணின் அனுபவமும், மாரடைப்பு ஏற்பட்டால் உடன் செய்யவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அனுபவப்பட்டவர் தருகிறார் .....

NURSE'S HEART ATTACK EXPERIENCE.

Please read and circulate.

This has been passed on from an ER nurse and is the best description of this event that

she had ever heard. Please read, pay attention, and send it on!

FEMALE HEART ATTACKS

I was aware that female heart attacks are different, but this is the best description I've ever read.

Women and heart attacks (Myocardial I nfarction). Did you know that women rarely have the same dramatic symptoms that men have when experiencing heart attack ... you know, the sudden stabbing pain in the chest, the cold sweat, grabbing the chest & dropping to the floor that we see in the movies. Here is the story of one woman's experience with a heart attack.

I had a heart attack at about 10 :30 PM with NO prior exertion, NO prior emotional trauma that one would suspect might've brought it on.

I was sitting all snugly & warm on a cold evening, with my purring cat in my lap, reading an interesting story my friend had sent me, and actually thinking, 'A-A-h, this is the life, all cozy and warm in my soft, cushy Lazy Boy with my feet propped up.

A moment later, I felt that awful sensation of indigestion, when you've been in a hurry and grabbed a bite of sandwich and washed it down with a dash of water, and that hurried bite seems to feel like you've swallowed a golf ball going down the esophagus in slow motion and it is most uncomfortable. You realize you shouldn't have gulped it down so fast and needed to chew it more thoroughly and this time drink a glass of water to hasten its progress down to the stomach. This was my initial sensation---the only trouble was that I hadn't taken a bite of anything since about 5:00 p.m.

After it seemed to subside, the next sensation was like little squeezing motions that seemed to be racing up my SPINE (hind-sight, it was probably my aorta spasming), gaining speed as they continued racing up and under my sternum (breast bone, where one presses rhythmically when administering CPR).

This fascinating process continued on into my throat and branched out into both jaws. 'AHA!! NOW I stopped puzzling about what was happening -- we all have read and/or heard about pain in the jaws being one of the signals of an MI happening, haven't we? I said aloud to myself and the cat, 'Dear God, I think I'm having a heart attack!'

I lowered the footrest dumping the cat from my lap, started to take a step and fell on the floor instead. I thought to myself, If this is a heart attack, I shouldn't be walking into the next room where the phone is or anywhere else ... but, on the other hand, if I don't, nobody will know that I need help, and if I wait any longer I may not be able to get up in moment.

I pulled myself up with the arms of the chair, walked slowly into the next room and dialed the Paramedics .. I told her I thought I was having a heart attack due to the pressure building under the sternum and radiating into my jaws. I didn't feel hysterical or afraid, just stating the facts. She said she was sending the Paramedics over immediately, asked if the front door was near to me, and if so, to unbolt the door and then lie down on the floor where they could see me when they came in.

I unlocked the door and then lay down on the floor as instructed and lost consciousness, as I don't remember the medics coming in, their examination, lifting me onto a gurney or getting me into their ambulance, or hearing the call they made to St. Jude ER on the way, but I did briefly awaken when we arrived and saw that the Cardiologist was already there in his surgical blues and cap, helping the medics pull my stretcher out of the ambulance. He was bending over me asking questions (probably something like 'Have you taken any medications?'' but I couldn't make my mind interpret what he was saying, or form an answer, and nodded off again, not waking up until the Cardiologist and partner had already threaded the teeny angiogram balloon up my femoral artery into the aorta and into my heart where they installed 2 side by side stents to hold open my right coronary artery.

I know it sounds like all my thinking and actions at home must have taken at least 20-30 minutes before calling the Paramedics, but actually it took perhaps 4-5 minutes before the call, and both the fire station and St. Jude are only minutes away from my home, and my Cardiologist was already to go to the OR in his scrubs and get going on restarting my heart (which had stopped somewhere between my arrival and the procedure) and installing the stents.

Why have I written all of this to you with so much detail? Because I want all of you to know what I learned first hand.

1. Be aware that something very different is happening in your body not the usual men's symptoms but inexplicable things happening (until my sternum and jaws got into the act). It is said that many more women than men die of their first (and last) MI because they didn't know they were having one and commonly mistake it as indigestion, take some Maalox or other anti-heartburn preparation and go to bed, hoping they'll feel better in the morning when they wake up ... which doesn't happen.

My female friends, your symptoms might not be exactly like mine, so I advise you to call the Paramedics if ANYTHING is unpleasantly happening that you've not felt before.

It is better to have a 'false alarm' visitation than to risk your life guessing what it might be!

2. Note that I said ''Call the Paramedics.'' And if you can, take an aspirin. Ladies, TIME IS OF THE ESSENCE!

Do NOT try to drive yourself to the ER you are a hazard to others on the road.

Do NOT have your panicked husband who will be speeding and looking anxiously at what's happening with you instead of the road.

Do NOT call your doctor -- he doesn't know where you live and if it's at night you won't reach him anyway, and if it's daytime, his assistants (or answering service) will tell you to call the Paramedics. He doesn't carry the equipment in his car that you need to be saved! The Paramedics do, principally OXYGEN that you need ASAP. Your Dr. will be notified later.

3. Don't assume it couldn't be a heart attack because you have a normal cholesterol count. Research has discovered that a cholesterol elevated reading is rarely the cause of an MI (unless it's unbelievably high and/or accompanied by high blood pressure). MI's are usually caused by long-term stress and inflammation in the body, which dumps all sorts of deadly hormones into your system to sludge things up in there.

Pain in the jaw can wake you from a sound sleep.

Let's be careful and be aware. The more we know, the better chance we could survive.

A cardiologist says, if everyone who gets this mail sends it to 10 people, you can be sure that we'll save at least one life.

**Please be a true friend and send this article to all your friends (male & female) you care about!**